வீட்டில் ஒரு டன் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்
திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு டன் கலப்படத் தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு டன் கலப்படத் தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் தகவலின் பேரில் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள முருகேசன் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு, பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அளவிலான கலப்படத் தேயிலைத் தூளை பறிமுதல் செய்தனர். திருப்பூர் பகுதியில் கலப்படத் தேயிலைத் தூள் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.