FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவர்களுக்கு தேசிய திறனறிப் போட்டி

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனறிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனறிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
 இந்திய இயற்பியல் கழகம் சார்பில் நாடு முழுவதும் மொத்தம் 22 மையங்களில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான அறிவியல் திறனறிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்,  இந்த ஆண்டுக்கான  தேர்வு உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில்  நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம், பழனி வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர். இதில், 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின்னர் இரண்டாவது சுற்றுத் தகுதித் தேர்வு வரும் 31 ஆம் தேதி இதே மையத்தில் நடைபெற உள்ளது.
  இதில் தேர்வு பெறுபவர்களுக்கு  அடுத்த சுற்றுத் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. தேசியத் 
திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments