தேர்ப்பட்டியில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
தாராபுரம் அருகே விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் அருகே விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வேளாண்மை துறை சார்பில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்ககம் திட்டத்தில் மணக்கடவு கிராமம் தேர்ப்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். முகாமில் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மானாவாரி பயிர்களான சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களின் விளைச்சலை பெருக்கும் உத்திகள் குறித்தும், மானாவரி நிலங்களில் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குவது மற்றும் வேளாண்மை துறை மூலம் உயிர் உரம், நுண்ணூட்ட உரம் மானிய விலையில் வழங்குவது ஆகியவை குறித்தும் வேளாண் உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் பேசினார். கோபி வேளாண் விஞ்ஞானி ஜான் பிரபாகர் பங்கேற்று மானாவாரி விவசாயத்துக்கான தொழில்நுட்பம், நீர் சேமிப்பு தொழில்நுட்பமான கோடை உழவு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
மணக்கடவு கிராம மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக் குழுத் தலைவர் செந்தில் அரசு, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் அடையும் பயன்கள் குறித்து கூறினார்.
வேளாண்மை அலுவலர் .ரவி அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள் குறித்தும்,உழவன் செயலி பயன்பாடு குறித்தும் கூறினார். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவரி திட்டத்தினை விளக்கும் கையேடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் வழங்கினார்.
உதவி வேளாண்மை அலுவலர் கிருபானந்தன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.