ரூ. 8.76 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.76 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.76 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இந்த வார ஏலத்துக்கு மொத்தம் 207 மூட்டைகளில் 9,635 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 115.35-க்கும், குறைந்தபட்ச விலை ரூ. 73.55-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ. 8 லட்சத்து 76 ஆயிரத்து 360-க்கு விற்பனை நடைபெற்றது. திருச்சி, மதுரை, அய்யம்பாளையம், அலகுமலை, சின்னதாராபுரம், அறவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 35 விவசாயிகள் தேங்காய் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, சிவகிரி, காங்கயம், முத்தூர், வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 வணிகர்கள் இவற்றை வாங்கினர்.
விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.