FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கயம் நகராட்சியில் மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம்

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 43 மனுக்கள் பெறப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 43 மனுக்கள் பெறப்பட்டன.
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து நகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில்,  நகராட்சிப் பகுதிகளில் இருந்து மனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக 43 மனுக்கள் பெறப்பட்டன. 
இந்த முகாமில் நகராட்சி அலுவலக மேலாளர் சகுந்தலா, நகரமைப்பு ஆய்வாளர் அல்லிமுத்து, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றனர். இந்த மனுக்கள் மீது  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments