FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பூரில் 4 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம்

திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மூலம், வெங்கமேடு அரசு துவக்கப் பள்ளி, வி.கே.அரசினர் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி, பொங்குபாளையம் அரசு துவக்கப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் தலா ரூ. 2.88 லட்சம் மதிப்பில்  ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. 
இந்த வகுப்பறைகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்  கே.என்.விஜயகுமார் புதன்கிழமை துவக்கி வைத்தார்.  முன்னாள் மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார்,  பாத்திர உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் , துணைத் தலைவர் குணசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ரமணி நன்றி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments