மொண்டிபாளையம் கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 2.39 லட்சம் காணிக்கை
சேவூர் அருகிலுள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் காணிக்கை உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. அ
சேவூர் அருகிலுள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் காணிக்கை உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. அவற்றில் ரூ. 2.39 லட்சம், 19 கிராம் தங்கம், 58 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும், மேலத் திருப்பதி என்று போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஹர்ஷினி முன்னிலை வகித்தார். கோவை கிழக்கு ஆய்வாளர் உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் சந்திரமோகன், பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோயிலிலுள்ள 6 உண்டியல்களும் திறக்கப்பட்டன. அவற்றில் ரொக்கமாக ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 288 பணம், 19 கிராம் தங்கம், 58 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர்.
மொண்டிபாளையம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆலத்தூர் கனரா வங்கியினர் நகை மதிப்பீடு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.