ரூ. 2.15 கோடி மதிப்பில் 3 புதிய பூங்காக்கள்: பணிகளைத் துவக்கிவைத்தார் எம்.எல்.ஏ. குணசேகரன்
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட புதுநகர் காலனியில் ரூ. 68 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணர் கோயில் பகுதியில் ரூ. 1.15 கோடி மதிப்பிலும், ராயபுரம் ரவுண்டானா பகுதியில் ரூ. 92 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3 இடங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 2.75 கோடி மதிப்பில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இப் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் அடிக்கல் நாட்டி புதன்கிழமை துவக்கி வைத்தார். உதவி ஆணையர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.