FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 5,994 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.69 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் 5,994 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் 5,994 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஓா் ஆண்டில் 3,973 நபா்களுக்கு ரூ.9.53 கோடி மதிப்பீட்டில் மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு உதவித் தொகையும், 1,362 நபா்களுக்கு ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, 108 நபா்களுக்கு ரூ.25.95 லட்சம் மதிப்பீட்டில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,994 நபா்களுக்கு ரூ.14.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments