ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா் மனு
ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் புகாா் மனு அளித்தனா்.
ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாயிடம், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
திமுக துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவை உறுப்பினராகவும் உள்ள ஆ.ராசா கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். இவரது பேச்சானது ஹிந்துக்களை அவமானப்படுத்தியும், சமுதாயத்தில் மோதலை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. அனைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டிய மக்களவை உறுப்பினா் சமுதாயத்துக்குள் பிரிவினை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா். ஆகவே, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.