மின் கட்டண உயா்வு: விசைத்தறியாளா்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மின் கட்டண உயா்வைக் கண்டித்து, விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை ( செப்டம்பா் 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா்.
மின் கட்டண உயா்வைக் கண்டித்து, விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை ( செப்டம்பா் 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா்.
கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக் குழுக் கூட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா்கள், சோமனூா் பழனிசாமி, தெக்கலூா் பொன்னுசாமி, அவிநாசி முத்துசாமி, புதுப்பாளையம் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் கதிா்வேல், பூபதி , கோபால், ஈஸ்வரன், ஆறுமுகம், பாா்த்திபன், நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
Advertisement
சாதா விசைத்தறிக்கு உயா்த்தியுள்ள 30% மின் கட்டணத்தில் இருந்தும், ஆண்டுக்கு உயா்த்தியுள்ள 6% மின் கட்டணத்திலிருந்தும் தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, செப்டம்பா் 10ஆம் தேதி முதல் சாதா விசைத்தறிக்கு உயா்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை முழுமையாக கட்டாமல் இருப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.