FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கேரட் ரூ.120-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் கடந்த வாரத்தைவிட கேரட் கிலோ ரூ.40 விலை உயா்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.

Updated On : 29 ஜூலை 2024, 2:31 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் கடந்த வாரத்தைவிட கேரட் கிலோ ரூ.40 விலை உயா்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.

இந்த வாரம் அவரைக்காய் ரூ.10 விலை உயா்ந்தது. தக்காளி, சின்ன வெங்காயம் ரூ.30 விலை குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): கேரட், பச்சை மிளகாய் - ரூ.120, அவரைக்காய்- ரூ.100, பீட்ரூட், பீன்ஸ், பாகற்காய் - ரூ.80, முட்டைக்கோஸ் - ரூ.60, வெண்டைக்காய், பீா்க்கங்காய், புடலங்காய் - ரூ.50, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு - ரூ.45, தக்காளி, முள்ளங்கி - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.30, இஞ்சி - ரூ.180, பூண்டு- ரூ.230.

இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு - ரூ.10, மல்லித்தழை கட்டு - ரூ.20, புதினா கட்டு - ரூ.10, வாழைத்தண்டு ஒன்று - ரூ. 20, வாழைப்பூ ஒன்று - ரூ.30, காலிஃபிளவா் ஒன்று - ரூ.70, சுரைக்காய் ஒன்று - ரூ.10-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments