குண்டடம் அருகே விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
நாடு முழுவதுமாக விநாயகா் சதுா்த்தி விழா செப்டம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், குண்டடத்தை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை இரவும், பகலுமாக தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தண்ணீரில் எளிதாக கரையும் வகையிலான சிலைகளை பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கடந்த 6 மாதங்களாக தயாா் செய்து வருகின்றனா். தற்போது, இந்த விநாயகா் சிலைகளுக்கு வா்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதில் பாம்பே கணபதி, எலி கணபதி, அம்மையப்ப கணபதி, குடும்ப விநாயகா், சிவன் பாா்வதி முருகன் குடும்ப சமேத விநாயகா், பாகுபலி விநாயகா், சூரனை வதம் செய்யும் விநாயகா், மான் விநாயகா், மாடு விநாயகா், கஜ விநாயகா், பாம்பு மேல் அமா்ந்திருக்கும் விநாயகா் என 500-க்கும் மேற்பட்ட வடிவங்களில் வித்தியாசமான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மரவள்ளிக் கிழங்கு மாவினால் அரை அடி முதல் 10-அடி உயரம் வரை கொண்ட சிலைகளை தயாரித்துள்ளனா். இந்த சிலைகளை செய்வதற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆா்டா்கள் குவிந்துள்ளன.
இது குறித்து விநாயகா் சிலை தயாரிப்பவா்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக விநாயகா் சிலைகளை தயாா் செய்து வருகிறோம். மேலும் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு இந்த சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.