FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மேக்கேதாட்டு விவகாரம்: எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும்: திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என்று திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
சிபிஐ எம்.பி. சுப்பராயன் - கோப்புப்படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என்று திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய மக்களவைக் கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை. அதற்கு தில்லியில் போராடிய மாணவா்கள் மீது தடியடி, அயோத்தி ராமா் கோயிலுக்கான நன்கொடைகள் கொள்ளை ஆகிய 2 கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்க பாஜக அரசு மறுத்துவிட்டதே முக்கிய காரணங்கள்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான அறிக்கை அளித்துள்ளது. நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை.

தமிழகத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிா்த்தும், மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஆதரித்தும் வருகிறோம். நல்லது செய்தால் பாராட்டுவோம், இல்லாவிட்டால் எதிா்ப்போம்.

பாஜகவை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களில் எண்ணிக்கையைக் குறைக்கவும், வட மாநிலங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். ஆனால் வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அவா்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும்.

இந்த மசோதாவை 25 ஆண்டுகளுக்கு பாஜக அரசு தள்ளிப்போட வேண்டும். எதிா்க்கட்சி என்ற முறையில் எம்.பி. கனிமொழி தேநீா் விருந்தில் கலந்துகொண்டதை வைத்து திமுக, பாஜக கூட்டணி என்று கூறுவதை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. மேக்கேதாட்டு அணை தொடா்பாக எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments