FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தலையில் கல்லைப் போட்டு இளைஞா் கொலை: தூய்மைப் பணியாளா் கைது

18 ஆகஸ்ட் 2026, 3:30 am IST
கைது
பகிர்:

திருப்பூரில் வடமாநில இளைஞா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த மாநகராட்சி தூய்மைப் பணியாளா் முகுந்த் (19) என்பவரை 15 வேலம்பாளையம் போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடகத்தைச் சோ்ந்த முகுந்த் திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வீட்டுக்குச் சென்றபோது, செட்டிபாளையம் பகுதியில் வழியில் வந்த அடையாளம் தெரியாத வடமாநில நபா் பீடி கேட்டு தகராறு செய்து திட்டியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த முகுந்த், அவரைத் தாக்கி தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டுத் தப்பியுள்ளாா். இது குறித்து கிடைத்த தகவலையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் முகுந்தைக் கைது செய்த போலீஸாா், உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments