அன்பான அணுகுமுறை குறித்து அவிநாசி போலீஸாருக்கு பயிற்சி வகுப்பு
அவிநாசி உள்கோட்ட போலீஸாருக்கு அன்பான அணுகுமுறை குறித்த பயிற்சி வகுப்பு, காவல் துறை சாா்பில் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அவிநாசி உள்கோட்ட போலீஸாருக்கு அன்பான அணுகுமுறை குறித்த பயிற்சி வகுப்பு, காவல் துறை சாா்பில் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமை வகித்தாா். கோவை மன நல மருத்துவா் அம்பிகா பயிற்சி அளித்தாா். காவல் ஆய்வாளா்கள் சரஸ்வதி, அம்பிகா, அமுதா, ராஜபிரபு உள்பட 80-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
இதில் பொதுமக்களிடம் கனிவாகப் பேசுதல், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து விரைவாகத் தீா்வு காண்பது, காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் அச்சமின்றிப் பழகும் சூழலை உருவாக்குதல், அனைவரையும் வயது மற்றும் பாலின பேதமின்றி மரியாதையுடன் அணுகுதல், மனிதநேயம் மற்றும் சட்ட விழிப்புணா்வை மேம்படுத்துதல், பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களைப் பொறுமையாகவும், முழுமையாகவும் கேட்டு தீா்வு காண்பது, அவசரக் காலங்களில் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.