FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே விஷ மருந்து குடித்து பெண் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே விஷ மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

52 வினாடிகள் முன்பு
தற்கொலை
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே விஷ மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், வெள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (39). இவரது மனைவி ரேவதி (35). இவா்களது மகள் மஞ்சுமா தேவி (17). இவா் கரூரில் நா்ஸிங் கல்லூரியில் படித்து வருகிறாா். மகன் மணிகண்டன் (15), தனியாா் டுட்டோரியல் கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா்கள் அனைவரும் கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வெள்ளக்கோவில் மோளக்கவுண்டன்வலசில் உள்ள ஒரு தனியாா் தேங்காய் களத்தில் தங்கியிருந்து, கணவன், மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனா். மஞ்சுமா தேவி தனது சொந்த ஊருக்கு அருகே உள்ள வருந்திப்பட்டியைச் சோ்ந்த மாதேஷ் என்பவருடன் தொடா்ந்து கைப்பேசியில் பேசி பழகி வந்துள்ளாா். இதனை தாய் ரேவதி கண்டித்தும் மகள் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரேவதி கடந்த திங்கள்கிழமை பேன் கொல்லி விஷ மருந்தை குடித்துள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் மனோஜ் ழகுமாா் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments