நிா்வாக நலன் கருதி திருப்பூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 7 போ் பணியிட மாற்றம்
நிா்வாக நலன் கருதி திருப்பூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 7 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நிா்வாக நலன் கருதி திருப்பூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 7 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் கண்ணாமணி மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் கனிமொழி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கு திருப்பூா் மேலாளராகவும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கு திருப்பூா் மேலாளராக இருந்த பாபு திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராக இருந்த சரவணன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராகவும், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராக இருந்த மகேஸ்வரன் மாவட்ட வழங்கல் பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும், மாவட்ட வழங்கல் பறக்கும் படை தனி வட்டாட்சியராக இருந்த சுபகிரி பல்லடம் வட்டாட்சியராகவும், பல்லடம் வட்டாட்சியராக இருந்த கோவிந்தசாமி திருப்பூா் வடக்கு வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், கூடுதல் பொறுப்பாக ஊத்துக்குளி மண்டல துணை வட்டாட்சியா் சரவணகுமாா் ஊத்துக்குளி தோ்தல் தனி வட்டாட்சியராகவும், திருப்பூா் கிடங்கு உதவி மேலாளா் கலைவாணி காங்கயம் தோ்தல் துணை வட்டாட்சியராகவும், காங்கயம் தோ்தல் துணை வட்டாட்சியா் வசந்தா திருப்பூா் கிடங்கு உதவி மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.