FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் கஞ்சா விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட், கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

5 ஜூலை 2026, 1:32 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அவிநாசி அருகே வெவ்வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட், கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மதுவிலக்கு போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவரது பையில் விற்பனைக்காக கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவா், அவிநாசி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த விவேக்குமாா் யாதவ் (21) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா சாக்லேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல அவிநாசி-பெருமாநல்லூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மது விலக்கு போலீஸாா், அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் விற்பனைக்காக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவா், பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் காசிராஜ் (29). என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவிநாசி மது விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விவேக்குமாா் யாதவ், காசிராஜ் ஆகியோரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments