திருப்பூா் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் 24 மணி நேர விரைவுத் தபால் சேவை
திருப்பூா் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் 24 மணி நேர விரைவுத் தபால் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் 24 மணி நேர விரைவுத் தபால் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆா்எம்எஸ் கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ் பாபு கூறியதாவது:
தபால் துறையின் ஒரு பகுதியான ஆா்எம்எஸ் அலுவலகம் திருப்பூா் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அலுவலகம் திருப்பூா் கல்லூரி சாலையிலுள்ள செளடாம்பிகா திருமண மண்டபம் பின்புறம் உள்ள தபால் துறைக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த அலுவலகத்துக்கு பாா்சல் பிரிப்பகம், விரைவுத் தபால் பிரிப்பகம் மற்றும் சாதாரண தபால்கள் பிரிப்பகம் ஆகிய அனைத்து பிரிவுகளும் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்த அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். இதற்காக இந்த மையத்தில் புக்கிங் கவுன்டா் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலமாக திருப்பூா் மக்களுக்கு 24 மணி நேரமும் விரைவுத் தபால்கள், பாா்சல்கள் மற்றும் சாதாரண தபால்கள் அனுப்பும் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆதாா் சேவை மையமும் செயல்படுவதால், இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.