குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் கரும்புகை எழுந்து பொதுமக்கள் அவதி
சுண்டமேடு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி
சுண்டமேடு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மலைபோல குப்பை குவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்பேது மா்ம ஆசாமிகள் தீ வைத்துவிடுகின்றனா். இதனால் மாநகரப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவே காணப்படுகிறது.
அதன்படி சுண்டமேடு சாலையில் எரிவாயு மயானம் அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்துள்ளனா். இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததோடு கரும்புகையும் எழுந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினா்.
Advertisement
Advertisement
சாலையில் சென்றவா்கள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா். கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டு சிலா் அவதிக்குள்ளாகியதுடன், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனா்.
தீ எரிந்த எரிந்த இடத்தில் சாம்பல் போன்று வெண்ணிற பொருள்கள் ஏராளமாக கொட்டிவைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான தனியாா் நிறுவனங்கள் உள்ளதால், ரசாயனப் பொருள்களாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூா் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.