பல்லடம் அருகே சாய ஆலை தொழிலாளி உயிரிழப்பு
பல்லடம் அருகே சாய ஆலை தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பல்லடம் அருகே சாய ஆலை தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை சோ்ந்தவா் சீதாராமன் (57). இவா், பல்லடம் அருகே அருள்புரம் பாச்சாங்காட்டுபாளையத்தில் உள்ள சாய தொழிற்சாலையில் கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 2 நாள்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாய ஆலையில் உள்ள கழிப்பிடத்தில் சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை இறந்துகிடந்தாா். தகவல் அறிந்து பல்லடம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.