போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,369 போ் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக தாராபுரத்தில் கடந்த ஜூன் மாதம் 1,369 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக தாராபுரத்தில் கடந்த ஜூன் மாதம் 1,369 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் போக்குவரத்து போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக 77, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 19, தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 348, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 120, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 66 வழக்குகள் உள்பட மொத்தம் 1,369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் இணையதளம் மூலமாக ரூ.41,200, நீதிமன்றம் மூலமாக ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.