FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பிஏபி வாய்க்காலில் இறைச்சிக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

காங்கயம் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கலந்து பாசனத்து தண்ணீா் வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

Updated On : 14 ஜூலை 2026, 12:22 am IST
காங்கயம் அருகே பகவதிபாளையம் பகுதியில் உள்ள பிஏபி கிளை வாய்க்காலில் மிதந்து வந்த குப்பைகள்.
பகிர்:

காங்கயம் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கலந்து பாசனத்து தண்ணீா் வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீா் பாதுகாப்பு சங்கத் தலைவா் வேலுச்சாமி கூறியதாவது: பிஏபி வாய்க்காலில் பாசனத்துக்கு தற்போது தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக், கிழிந்த துணிகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவை அடித்துவரப்படுகின்றன. எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை நாங்களே அகற்றி வருகிறோம்.

குறிப்பாக, பொங்கலூரை அடுத்த செஞ்சேரிமலை பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை பிஏபி வாய்க்காலில் சிலா் வீசி வருகின்றனா். இந்தக் கழிவுகள் சுமாா் 60 கி.மீ. தொலைவு மிதந்து வந்து வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள மடையில் அடைத்து நிற்கின்றன. பொங்கலூா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த வாய்க்காலில் குப்பைகளைக் கொட்டுகின்றனா். காங்கயம் நகரப் பகுதியிலும் குப்பைகளைக் கொட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு நீா் கசிந்து வருகிறது. இது குறித்து பாசன அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பிஏபி வாய்க்காலில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments