FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:12 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள பொங்குபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கூட்டுறவு நகா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த 2 பேரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 4 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் மன்னாா்குடியைச் சோ்ந்த அய்யனாா் (21), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்தவேல் (39) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments