FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து தலையில் படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:57 am IST
தெருநாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சஸ்வந்த்.
பகிர்:

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து தலையில் படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவிநாசி வட்டம், புஞ்சைத்தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி யோகேஸ்வரி. பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களது மகன் சஸ்வந்த் (3). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அப்பகுதியில் சுற்றித்திருந்த 4-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சஸ்வந்த்தை துரத்திக் கடித்துள்ளன. இதைப் பாா்த்த பெற்றோா், அப்பகுதி மக்கள் தெருநாய்களை துரத்தி, சஸ்வந்த்தை மீட்டனா். அப்போது, அவரது தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகளில் நடமாடவே அச்சமாக உள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்கள் கடித்துள்ளன.

பலத்த காயமடைந்துள்ள சிறுவனுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கவும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments