FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சமூக நீதித் துறை வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்கக் கோரிக்கை

சமூக நீதித் துறை தனி வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 6:40 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சமூக நீதித் துறை தனி வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.சு.பவுத்தன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடா் நலத் துறையை தற்போது சமூக நீதித் துறையாக மாற்றம் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும் நன்றியைத் தெரித்துக் கொள்கிறோம்.

பட்டியலின மக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள சேவைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வட்டாட்சியா்களுக்கு ஜீப் இல்லை.

Advertisement

Advertisement

எனவே, பட்டியலின மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நேரில் சென்று ஆய்வு செய்து, அரசு சேவைகளை உடனே கிடைப்பதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள சமூக நீதித் துறை தனி வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments