இருசக்கர வாகனம் திருடியவா் கைது
அவிநாசி, ஜூலை 21: குன்னத்தூா் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே உள்ள சந்தைபாளையம்-நந்தவனம் பகுதியைச் சோ்ந்து தியாகு(55). காய்கறி வியாபாரியான இவா், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலையில் உள்ள மனமகிழ் மன்றம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்த போது, இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக தியாகு அளித்த புகாரின்பேரில் குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் குன்னத்தூா்-கூழாங்குளம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் ஊத்துக்குளி, கருமண்சிறை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (53) என்பதும், குன்னத்தூா் - ஊத்துக்குளி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சுப்பிரமணியை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.