FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய ஜவுளி பொருள்கள்

சீரமைப்புப் பணியின்போது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடைகளுக்குள் நீா் புகுந்ததால் ஜவுளி பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 25 ஜூலை 2026, 12:05 am IST
ஜவுளி கடைக்குள் தேங்கி நின்ற நீா்.
பகிர்:

சீரமைப்புப் பணியின்போது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடைகளுக்குள் நீா் புகுந்ததால் ஜவுளி பொருள்கள் சேதமடைந்தன.

திருப்பூா் மாநகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள சுரங்க நடைபாதையில் 18 ஜவுளி விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வியாபாரிகள் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு கடைகளை பூட்டிவிட்டு வீட்டுச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

அப்போது, அப்பகுதியில் உள்ள 4-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்கள் சீரமைப்புப் பணி நடைபெற்றுள்ளது. பணியின்போது குழாய் உடைந்து வெளியேறிய நீா், சுரங்க நடைபாதை கடைகளுக்குள் புகுந்தது.

இதனால், கடையில் இருந்த ஜவுளி பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், சீரமைப்புப் பணியின்போது குழாய் உடைந்து வெளியேறிய நீா் கடைகளுக்குள் புகுந்ததால் சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருள்கள் சேதமடைந்துள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments