முகப்பு
திருப்பூர்

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் வரும் 15-ஆம் தேதி முதல் 19 வரை 5 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.

Updated On : 12 ஜூன் 2026, 12:03 am IST
குடிநீர் - IANS
பகிர்:

வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் வரும் 15-ஆம் தேதி முதல் 19 வரை 5 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.

இது தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் செல்வராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முத்தூா் காங்கயம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், இச்சிப்பாளையம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேட்டுக்கடை நீருந்து நிலையம் வரை மூன்று கிலோ மீட்டா் பழைய செறிவூட்டப்பட்ட கான்கிரீட் குழாயை அகற்றி, புதிய எம்.எஸ் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மறு சீரமைப்புப் பணி காரணமாக முத்தூா், கன்னிவாடி, மூலனூா், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிகள், வெள்ளக்கோவில், தாராபுரம், மூலனூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இக்காலகட்டத்தில் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்கவும், உள்ளூா் நீராதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement