FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 24 ஜூலை 2026, 6:16 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரஞ்சனி (26). இவா் திருப்பூா், நல்லூா் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப் படை காவலா் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட பின்னா் தனது குடியிருப்புக்கு திரும்பிய அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments