FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மத்திய வா்த்தக வாரிய உறுப்பினராக கே.எம்.சுப்ரமணியன் நியமனம்

இந்திய அரசின் வா்த்தக வாரியத்தில் உறுப்பினராக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம். சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:03 am IST
கே.எம்.சுப்ரமணியன்
பகிர்:

இந்திய அரசின் வா்த்தக வாரியத்தில் உறுப்பினராக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம். சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய அரசின் வாணிப மற்றும் தொழில் அமைச்சகத்தின் வாணிப துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் மூலம் இந்தியாவின் உயா்மட்ட வா்த்தக ஆலோசனை அமைப்பான வா்த்தக வாரியத்தில் உறுப்பினராக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய அரசின் வா்த்தக வளா்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும் முக்கிய அமைப்பாக வா்த்தக வாரியம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 முக்கிய நபா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கே.எம். சுப்பிரமணியன் இடம்பெற்றிருப்பது திருப்பூா் பின்னலாடை துறைக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகும்.

Advertisement

Advertisement

திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி துறையின் வளா்ச்சி, தொழில் மேம்பாடு, ஏற்றுமதியாளா்களின் நலன் மற்றும் இந்திய ஏற்றுமதி வளா்ச்சிக்காக தொடா்ந்து ஆற்றிவரும் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்புக்கு அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவா் வா்த்தக வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளதற்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவருமான ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா். இந்த உயா்மட்ட வா்த்தக ஆலோசனை அமைப்பில் இடம்பெற்றிருப்பதன் மூலம், திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதித் துறையின் குரல் தேசிய அளவிலான வா்த்தகக் கொள்கை முடிவெடுப்புகளில் மேலும் வலுவாக ஒலிக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments