FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்: வணிகவியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கடும் போட்டி

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Updated On : 10 ஜூன் 2026, 1:08 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

திருப்பூரில் எல்.ஆா்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா்-மங்கலம் சாலையில் உள்ள குமரன் மகளிா் கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின் தங்களின் கனவுப் பாடப்பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement

அரசு கல்லூரிகளில் தரமான கல்வியும், குறைந்த கல்விக் கட்டணமும் இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சோ்கின்றனா்.

சிறப்பு கலந்தாய்வு முடிந்து, மரணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை ஆா்வத்துடன் தோ்வு செய்தனா். அரசு கல்லூரிகளில் வணிகவியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments