FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசி: கௌசிகா நதியில் கழிவு கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:23 am IST
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதி தெக்கலூா், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது.

இந்நிலையில், தெக்கலூா் கௌசிகா நதியில் தொடா்ந்து கழிவுகளை கொட்டி வருவதாக சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே தெக்கலூா் ஏரிபாளையத்தில் உள்ள கௌசிகா நதியில் கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை சனிக்கிழமை காலை கொட்ட வந்த லாரியை சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 7 டன் கழிவு மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அவிநாசி காவல் நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments