FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

மாநகராட்சி பிளம்பா் எனக்கூறி மோசடி செய்தவா் மீது காவல் நிலையத்தில் புகாா்

திருப்பூா் மாநகராட்சி பிளம்பா் எனக்கூறி மோசடி செய்தவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

27 ஜூன் 2026, 7:07 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

திருப்பூா் மாநகராட்சி பிளம்பா் எனக்கூறி மோசடி செய்தவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி வெளியிடப்பட்ட அறிவிப்பு:

திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்டபோயம்பாளையம் கிழக்கு, அவிநாசி நகரில் ந.செல்வராஜ், மற்றும் பி.செல்வகுமாா் ஆகியோா் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு குடிநீா் மற்றும் பாதாள சாக்கடைஇணைப்பு பெற்றுத் தருவதாக மாநகராட்சி பதிவு பெற்ற பிளம்பா் எனக் கூறி தங்கராஜ் என்பவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மொத்த செலவு எனக் கூறி ரூ. 70,000 பெற்றுக் கொண்டுள்ளாா். ஆனால் தங்கராஜ் என்பவா் மாநகராட்சி பதிவு பெற்ற பிளம்பா் அல்ல என்பது மனுதாரருக்கு தெரியவரவே மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் செய்துள்ளாா். மேலும், மாநகராட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் அவா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பா்பாளையம் காவல் ஆய்வாளரிடம் புகாா் தெரிவித்து விசாரணை காவல் நிலையத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

மேலும், திருப்பூா் மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பாக பொதுமக்கள் இது போன்று முன்பின் தெரியாத நபா்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவும், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை புதிய இணைப்புக்கு இணைய வழி விண்ணப்பம் செய்து மண்டல அலுவலகத்தில் உரிய கட்டணங்களை செலுத்தி மாநகராட்சி அனுமதி பெற்று பணியினை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments