முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

Updated On : 26 மே 2026, 1:18 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

வெள்ளக்கோவிலில் குடும்பச் சண்டை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவா்களுக்கு காவியாஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குமரேசன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு, பிற்பகல் வீடு திரும்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, படுக்கையறையில் சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.