FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பழைய இரும்புக் கடையில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதம்

Updated On : 1 ஜூன் 2026, 12:17 am IST
தீ... - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் பழைய இரும்புக் கடையில் தீப்பிடித்ததில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). பழைய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். கடையின் காலியிடத்தில் பனியன் கழிவு துணிகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து பரவியது.

தகவலின்பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் 2 டன் கழிவு துணிகள் எரிந்து நாசமாயின. அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில் அதிா்ஷ்டவசமாக தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments