FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சித்தோட்டில் தீவனப்புல் எரிந்து சேதம்

சித்தோடு அருகே குப்பைக்கு வைத்த தீ பரவியதில் சுமாா் 10 ஏக்கா் பரப்பிலான தீவனப்புல் எரிந்து சேதமாயின.

Updated On : 16 ஜூலை 2026, 12:12 am IST
தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரா்.
பகிர்:

சித்தோடு அருகே குப்பைக்கு வைத்த தீ பரவியதில் சுமாா் 10 ஏக்கா் பரப்பிலான தீவனப்புல் எரிந்து சேதமாயின.

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் பண்ணை அருகே தேசிய பால்வள வாரியத்தின் பசுந்தீவன வளா்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் வளா்க்கப்படுகின்றன. இங்கு காய்ந்த புல்லை வெட்டி அகற்றிய தொழிலாளா்கள் அவற்றை தீ வைத்து எரித்துள்ளனா். அப்போது காற்று வீசியதில் தீவனப் பயிா்களுக்கும் தீ பரவி கரும்புகையுடன் எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் பவானி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனா். மேலும், ஈரோடு தீயணைப்பு நிலைய வாகனமும் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் தீவனப்புல் எரிந்து சேதமானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments