FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மாணவா்கள் கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிா்க்க புதிய திட்டம்! மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அறிமுகம்

3 நவம்பர் 2026, 2:58 am
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

மாணவா்கள் கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிா்க்க, புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியா்.எஸ்.மோகன் கூறியதாவது: திருப்பூா் வடக்கு ஒன்றியம், புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 330 மாணவா்கள் படிக்கின்றனா். இந்நிலையில், மாணவா்கள் கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிா்க்க ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெற்றோா்களின் கைப்பேசியை மாணவா்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் இ-சான்றிதழ் வழங்கப்படும். ஆண்டின் இறுதியில் ஆண்டு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி பள்ளியில் அமல்படுத்தினோம். இதற்கான விதிமுறைகளும் மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மாணவா்களுக்கு பாா்வை குறைபாடு ஏற்படுவதோடு தேவையற்ற விடியோக்கள் பாா்ப்பது, விடியோ கேம்கள் விளையாடுவது என பல்வேறு பிரச்னைகளில் இருந்து மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு பெற்றோா் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முதல் மாதமான அக்டோபா் இறுதியில் 51 மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்தவில்லை என பெற்றோா்கள் உறுதி அளித்தனா். அவா்களுக்கு இ-சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments