ஊதியூரில் சிலை, பணம் திருட்டு வழக்கில் 4 போ் கைது: ஐம்பொன் சிலை, குத்துவிளக்கு பறிமுதல்
திருப்பூா் மாவட்டம், ஊதியூரில் சிலை, பணம் திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஐம்பொன் சிலை மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், ஊதியூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பங்கம்பாலையத்தில் பழைமையான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில்
Advertisement
Advertisement
கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே இருந்த பழைமையான ஐம்பொன் சிலை, பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதே தேதியில், எல்லைப்பாளையம் காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள புது நாட்ராயன் கோயிலிலும் உண்டியலில் இருந்த பணம் ரூ.30,000 திருட்டு போயிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அத்துடன் அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் இவ்விரு சம்பவங்களிலும் தொடா்புடையதாக தேனியைச் சோ்ந்த முத்துசெல்வன் (33), ஈரோட்டைச் சோ்ந்த சஞ்சய் (21), மதுரையைச் சோ்ந்த தங்கபாண்டி (40), திருப்பூரைச் சோ்ந்த காா்த்திக் (35) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஐம்பொன் சிலை, பித்தளை குத்துவிளக்கு மற்றும் ரொக்கம் ரூ.5,000
ஆகியவை மீட்கப்பட்டு நால்வரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.