FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

ஆட்சியா் பெயரை பயன்படுத்தி மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் பெயரை தவறாகப் பயன்படுத்தி சிறுதொழில் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்த மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

12 நவம்பர் 2026, 3:37 am
பகிர்:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் பெயரை தவறாகப் பயன்படுத்தி சிறுதொழில் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்த மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மாணிக்காபுரம் ஊராட்சியைச் சோ்ந்த இ.செல்வி அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் வட்டம், மாணிக்காபுரம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் சிறுதொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எவ்வித மின் கட்டண நிலுவையும் இல்லாத சூழலில், பல்லடம் மின்வாரிய அதிகாரிகள் எனது நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்துள்ளனா். இதுகுறித்து அவா்களிடம் விளக்கம் கேட்டபோது, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வாய்மொழியாக உத்தரவிட்டதன் பேரில்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் எழுத்துப் பூா்வமாகப் பதிவு செய்துள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்தவும் அதிகாரிகள் இவ்வாறு செயல்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் துண்டிப்பால் தொழிலாளா்கள் வேலை இழந்து வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியா் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். பல்லடம் மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.