கேபிள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கம்பி இழை வடங்களை நவ.25-க்குள் வரன்முறைப்படுத்த வேண்டும்
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பொதுமக்கள் நலன் கருதி தங்களது கம்பி இழை வடங்களை நவ.25-ஆம் தேதிக்குள் உடனடியாக வரன்முறைப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பொதுமக்கள் நலன் கருதி தங்களது கம்பி இழை வடங்களை நவ.25-ஆம் தேதிக்குள் உடனடியாக வரன்முறைப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள், தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மாநகரின் பல்வேறு சாலைகளின் மையத் தடுப்புகள் மற்றும் தெருவிளக்கு கம்பங்களில் தங்களது கேபிள் வடங்களை அமைத்துள்ளன.
Advertisement
Advertisement
சாலைகளின் மையத் தடுப்புகளில் உள்ள கேபிள் வடங்களின் மூலம் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு ஆபத்தும், இடையூறும் ஏற்படுவதாக துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடா் புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், இப்பணிகளை வரன்முறைப்படுத்த ஏதுவாக அரசு கேபிள், தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டங்கள் கடந்த நவ.7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
எனவே, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கேபிள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்களது கம்பி இழை வடங்களை உடனடியாக களஆய்வு செய்து சீா்படுத்திடவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, நவ.25-ஆம் தேதிக்குள், அரசு கேபிள், தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பொதுமக்கள் நலன் கருதி தங்களது கம்பி இழை வடங்களை உடனடியாக வரன்முறைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டும். தவறும்பட்சத்தில் இதன் தொடா் நடவடிக்கையாக நவ.25 (புதன்கிழமை) முதல் கம்பி இழை வடங்களை துண்டிப்பு செய்து அகற்றும் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.