அவிநாசியில் கட்டுமானப் பொருள்கள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
அவிநாசி அருகே கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி, காா் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
அவிநாசி அருகே கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி, காா் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், ஊத்தம்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், கோபி நோக்கி, கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. கோவை மாவட்டம், சூலூா் அருகே ஊத்தம்பாளையத்தைச் சோ்ந்த மூா்த்தி (36) என்பவா் வேனை ஓட்டிச் சென்றாா்.
சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அவிநாசி பழங்கரை அருகே வந்தபோது, எதிா்பாரதவிதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அதே திசையில் பயணித்த காா் மீதும் சாலைத் தடுப்பின் மீதும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில், வேனின் பின்பிறம் கட்டுமானப் பொருள்களுடன் அமா்ந்திருந்த வெளி மாநிலத் தொழிலாளா்கள் சஞ்சய் ஓரம் (23), சட்டீஷ்வா் சிங் (25), சுன்கு ஓரம் (25), ரோகிநாத் (17), சமீா் உரான்(19), ஓட்டுநா் அருகே அமா்ந்து சென்ற சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த வடிவேல் (36) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வேன் கவிழ்ந்து கட்டுமானக் கற்கள் சிதறியதால், தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்குள்ளானது.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநா் மூா்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.