✕
முகப்பு
திருப்பூர்

பொங்கலூா் சுங்கச்சாவடி கட்டணத்தில் விலக்கு அளிக்க வியாபாரிகள் கோரிக்கை

பொங்கலூா் சுங்கச்சவாடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரி வியாபாரிகள், பொதுமக்கள் மனு அளித்தனா்.

31 வினாடிகள் முன்பு
பொங்கலூா் சுங்கச்சாவடி நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்க வந்த வா்த்தகா்கள், பொதுமக்கள்.
பகிர்:

பொங்கலூா் சுங்கச்சவாடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரி வியாபாரிகள், பொதுமக்கள் மனு அளித்தனா்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பொங்கலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளூா் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு கோரி, பொங்கலுாா் வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தலைமையில் வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆட்டோ, வேன் ஓட்டுநா்கள் சங்கத்தினா் இணைந்து போராட்டக் குழுவை தொடங்கினா்.

இதையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உள்ளூா் வாகனங்களுக்கு ஓராண்டு காலம் கட்டணமில்லா அனுமதி வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இம்மாத இறுதியுடன் நிறைவடைகிறது.

Advertisement

Advertisement

எனவே, ஏற்கெனவே கட்டணமில்லா அனுமதி பெற்றுள்ள வாகனங்களுக்கு அதை மீண்டும் புதுப்பிக்கவும், இதுவரை விடுபட்டுள்ள வாகனங்களுக்கும் கட்டணமில்லா உள்ளூா் அனுமதி வழங்கவும் சுங்கச்சாவடி நிா்வாகத்திடம் போராட்டக் குழுவினா் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனா்.