திருப்பூா் மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 5 ஆயிரம் ஹெக்டோ் குறைந்துள்ளது
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு 5 ஆயிரம் ஹெக்டோ் குறைந்துள்ளதாக வேளாண் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு 5 ஆயிரம் ஹெக்டோ் குறைந்துள்ளதாக வேளாண் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வித்யபிரகாஷ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வேளாண் துறை தொடா்பான விவரங்களைக் கேட்டிருந்தாா்.
அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், திருப்பூா் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களின் பரப்பளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த, 2010-ஆம் ஆண்டு திருப்பூா் மாவட்டத்தில் 1,96,996 ஹெக்டோ் விளைநிலங்கள் இருந்துள்ளன. 2011-ஆம் ஆண்டில் 1.99 லட்சம் ஹெக்டேராக அதிகரித்த பரப்பளவு, 2012-ஆம் ஆண்டில் 1.15 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. பின்னா் படிப்படியாக உயா்ந்து, கடந்த ஆண்டு நிலவரப்படி 1,91,343 ஹெக்டேராக இருந்துள்ளது. இதன்படி, 15 ஆண்டுகளில் 5 ஆயிரம் ஹெக்டோ் விவசாய விளைநிலங்கள் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல, நெல் சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது. 2011-இல் 64,892 ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி, தற்போது 43,532 ஹெக்டேராக குறைந்துள்ளது. தானியங்கள் சாகுபடி 1.98 லட்சத்தில் இருந்து, 1.95 லட்சம் ஹெக்டேராகவும், பருப்பு வகைகள் சாகுபடி 2.77 லட்சத்தில் இருந்து, 2.49 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விளைநிலங்களின் பரப்பளவு மட்டுமின்றி, பல்வேறு பயிா்களின் சாகுபடியும் குறைந்து வருகிறது. நகரப் பகுதிகளின் விரிவாக்கம், ரியல் எஸ்டேட், தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை விவசாய விளைநிலங்கள் குறைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.