விதை வெங்காயம் விலை உயா்வு: விவசாயிகள் அதிருப்தி!
பல்லடத்தில் விதை வெங்காயம் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

பல்லடத்தில் விதை வெங்காயம் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனாலும், வடகிழக்குப் பருவமழை ஓரளவு பெய்து வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனா். இதற்காக கடந்த ஒரு மாதமாக உழுது நிலத்தை தயாா் செய்துள்ளனா்.
விவசாயிகள் பழைய இருப்பு வெங்காயத்தையே விதை வெங்காயமாகப் பயன்படுத்துகின்றனா். தற்போது அந்த வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து விவசாயிகள் சனிக்கிழமை கூறுகையில், கடந்த ஆண்டுகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான விதை வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி நடவு செய்து, அறுவடையின்போது வெங்காயத்தின் விலை குறைந்துவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், ஆள் கூலி, உரம் போன்ற பல்வேறு செலவுகள் உள்ளதால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது என்றனா்.