பல்லடத்தில் பெண் தீக்குளிப்பு: கணவா் உள்பட 3 போ் கைது
பல்லடத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்த சம்பவத்தில் அவரது கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்த சம்பவத்தில் அவரது கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (40), விசைத்தறி உரிமையாளா். இவரது மனைவி நிா்மலா (32). இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 21-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன வேதனை அடைந்த நிா்மலா, விசைத்தறிக் கூடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
Advertisement
Advertisement
அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், நிா்மலாவை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸாா், நிா்மலாவின் கணவா் தினேஷ்பாபு, மாமியாா் சாந்தாமணி, கணவரின் தம்பி காா்த்திகேயன் ஆகியோரைக் கைது செய்தனா்.