முகப்பு
திருப்பூர்

தடையை மீறி கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரணி! 200-க்கும் மேற்பட்டோா் கைது

29 நவம்பர் 2026, 5:25 am
தடையை மீறி கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரணி! 200-க்கும் மேற்பட்டோா் கைது
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூரில் தடையை மீறி பேரணி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் மத நல்லிணக்க மக்கள் ஒற்றுமைப் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூா் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை வரை சனிக்கிழமை ஊா்வலமாகச் செல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் சாா்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு காவல் துறை சாா்பில் ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடையை மீறி குமரன் நினைவகம் முன்பு திரண்ட இடதுசாரி கட்சியினா், உச்சநீதிமன்றத் தீா்ப்பைக் கண்டித்து பேரணியாக செல்ல புறப்பட்டனா். அவா்களை திருப்பூா் ரயில் நிலையம் முன்பாக தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

Advertisement

Advertisement

அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இடதுசாரி கட்சியினா் ரயில் நிலையம் முன்பாக சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.