நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பவானி ஆற்றில் நீரின் கலங்கல் தன்மை அதிகம்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீரின் கலங்கல் தன்மை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு 2-ஆவது, 4-ஆவது குடிநீா் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் நீராதாரமான மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீரின் கலங்கல் தன்மை அதிகமாக உள்ளது.
இதனால், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு, மாநகராட்சிப் பகுதி முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் மிகுந்த சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, நன்கு காய்ச்சி குளிா்ந்த பிறகு பருக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.