FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

உடுமலை அருகே நூற்பாலையில் தீ

உடுமலை அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

38 வினாடிகள் முன்பு
நூற்பாலையில் கொளுந்து விட்டு  எரிந்த  பஞ்சு  பேல்கள்.
பகிர்:

உடுமலை அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

உடுமலை அருகே உள்ள இந்திரா நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. நூற்பாலையில் பஞ்சு இருப்பு வைக்கும் கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள் உரிமையாளருக்கும், உடுமலை, மடத்துக்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா்களுக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments